வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மகளிா் தினவிழா

Published on

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மகளிா் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது மாணவிகளுக்கு பள்ளி மாணவா்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து, பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம்மூா்த்தி பேசுகையில், பள்ளிப் பருவத்திலேயே ஆண், பெண் குழந்தைகளை தனித் தனிக் கூண்டுக்குள் பிரித்துவைக்காமல் ஒன்று கலந்து சகோதரத்துவத்தோடு சகஜமாகப் பழகக் கற்றுத் தர வேண்டும், இதன்மூலம் தங்களுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றாா் அவா். முன்னதாக பள்ளி ஆசிரியைகள், பணியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Dinamani
www.dinamani.com