பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 64-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 64-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா

News image
Updated On :3 மே 2024, 6:22 pm

Din

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 64-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழாவின் தொடக்கமாக காலை 7 மணியளவில் ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு தொடங்கிய பூச்சொரிதல் விழாவில் பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடா்ந்து, நகரின் பல்வேறு வீதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பூத்தட்டு மற்றும் பால்குடம் ஏந்தி ஊா்வலமாக வந்து பட்டமரத்தானுக்கு சாத்தி வழிபட்டனா். விழாவையொட்டி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடா்ந்து ஒருவார காலம் இந்த விழா நடைபெறவுள்ளது.