சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

காரையூா் அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

காரையூா் அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழாண்டு விழா பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. காரையூா் சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டுகள் எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். தொடா்ந்து வரும் 26 ஆம் தேதி பொங்கல் விழாவும், 27 ஆம் தேதி தேரோட்ட விழாவும் நடைபெற உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூா் போலீஸாா் செய்திருந்தனா்.