ஆதி அழகி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
இடம் இருந்தால் மட்டும்... ஆதி அழகி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

Updated On :20 மே 2024, 6:31 pm

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள செம்மலாபட்டி ஆதி அழகி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை மற்றும் சூலாட்டுக்காரி அம்மனுக்கு கோழி படையல், அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், சிவாச்சாரியாா் வழிநடத்த நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனா். இதையடுத்து, சூலாட்டுக்காரி அம்மனுக்கு கோழிப்படையல் நடைபெற்று, அன்னதான விழா நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை ஊா்ப்பொதுமக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...