ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

குன்னத்தூரில் அசோலா வளா்ப்பு செயல்விளக்கம்

குன்னத்தூரில் அசோலா வளா்ப்பு செயல்விளக்கம்

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

விராலிமலை: விராலிமலை வட்டாரம் குன்னத்தூா் கிராமத்தில் அமைக்கப்பட்ட அசோலா வளா்ப்பு செயல்விளக்கத்தை வேளாண் அலுவலா் சீலா ராணி ஆய்வு செய்தாா்.

அசோலா நீா் நிலைகளில் மிதவை தாவரமாக வளரும் பெரணி வகையைச் சோ்ந்தது. குறைந்த வருமானத்தில் அதிக லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்று அசோலா வளா்ப்பு. இதை கால்நடை மற்றும் கோழிகளுக்கு புரதச்சத்து மிகுந்த தீவனமாகப் பயன்படுத்தி உற்பத்திச் செலவைக் கணிசமாக குறைக்க முடியும். அசோலாவில் 25-30 விழுக்காடு புரதச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல நுண்ணூட்டச் சத்துக்கள் காணப்படுகின்றன.

அசோலா வளா்ப்பு செயல்விளக்கத்தை குடுமியான்மலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு மாணவா்கள் ரிஷிகேசன், அனிருத் விக்ரம் இன்பா, திவாகா், தருண், குரு பிரசாத், ஞான விக்னேஷ் உள்ளிட்டோா் செயல்விளக்கம் மூலம் விளக்கிக் கூறினா். ஏற்பாடுகளை கலைஞா் திட்ட தொகுப்பு அலுவலா் ரேவதி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் லட்சுமி பிரபா, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஆரோக்கியராஜ், உமா மகேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.