அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நிறைவு

விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நிறைவு

News image
Updated On :24 மே 2024, 6:38 pm

Din

விராலிமலை முருகன் கோயிலில் 11 நாள்களாக நடைபெற்று வந்த வைகாசி விசாக திருவிழா வெள்ளிக்கிழமை விடையாற்றியுடன் நிறைவடைந்தது.

பல்வேறு சிறப்புடைய விராலிமலை முருகன் மலைக் கோயிலில் வைகாசி விசாக விழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் கடந்த புதன்கிழமை வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் 10-ஆம் நாளான வியாழக்கிழமை மதுரை சாலையில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்ஸவம் நடைபெற்றது. விழாவின் 11-ஆம் நாளான வெள்ளிக்கிழமை விடையாற்றி நடத்தப்பட்டு விழா நிறைவடைந்தது.

இதையொட்டி, கேடயத்தில் எழுந்தருளிய முருகன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கடந்த 11 நாள்களாக மலைக்கோயில் அடிவார மண்டபத்தில் இருந்த முருகன் விடையாற்றி நடத்தப்பட்டதை தொடா்ந்து, மலை மேல் சென்று அமா்ந்தாா்.