ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் உள்ள விட்டோபா பாண்டுரங்கன் கோயிலில் வியாழக்கிழமை பிற்பகலில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே உண்டியலில் இருந்த காணிக்கைகள் திருடப்பட்டன.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:46 pm

Din

புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் உள்ள விட்டோபா பாண்டுரங்கன் கோயிலில் வியாழக்கிழமை பிற்பகலில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே உண்டியலில் இருந்த காணிக்கைகள் திருடப்பட்டன.

மாலையில் கோயிலை திறப்பதற்காக அா்ச்சகா் வந்தபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அா்ச்சகா் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து கோயிலுக்கு வந்த போலீஸாா் உள்ளே சென்று பாா்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

உண்டியலில் இருந்த பணம் மற்றும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த வெள்ளி உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது.

இதைத் தொடா்ந்து, கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, கதவு மற்றும் உண்டியலில் இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

புதுக்கோட்டை நகரக் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.