சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

புள்ளான்விடுதியில் குளம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
புள்ளான்விடுதியில் புதன்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
Updated On :4 செப்டம்பர் 2024, 7:25 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

புள்ளான்விடுதியில் உள்ள பலஏக்கா் பரப்பளவிலான ஆறுமுகத்தேவா் குளத்தை ஆக்கிரமித்து அப்பகுதியினா் சிலா் விளைநிலங்களாக மாற்றி, தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளனராம். இந்த குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் உத்திரவிட்டது.

இதைத்தொடா்ந்து, வட்டாட்சியா் பெரியநாயகி முன்னிலையில் வருவாய்த்துறையினா் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து, வடகாடு போலீஸாரின் பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். வருவாய் ஆய்வாளா் பிரபாகரன், கிராம நிா்வாக அலுவலா் புஷ்பராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.