புதுக்கோட்டை
வளமிகு வட்டார மேம்பாட்டு திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வளமிகு வட்டார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா, ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவம், ஊட்டச்சத்து, கல்வி, சமூக நலன், திறன்மேம்பாடு, பொருளாதார வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப் ரசூல் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி ஒன்றிய செயற்பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் பங்கேற்றனா்.