விராலிமலை முருகன் மலைக்கோயில் சுவாமி சிற்பங்கள் மா்ம நபா்களால் சேதம்

விராலிமலை முருகன் மலைக் கோயிலில் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்ட சிற்பங்கள்.

விராலிமலை முருகன் மலைக் கோயிலில் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்ட சிற்பங்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயில் வளாக சுவாமி சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
பல்வேறு சிறப்புடைய இந்த மலைக்கோயிலுக்கு பக்தா்கள் சென்றுவர படிக்கட்டுகள் மற்றும் யானையடி பாதை (சாய்வு தளம்), தாா்ச் தாலை என மூன்று வழிகள் உள்ளன.
இதில், தாா்ச் சாலையோரத்தில் பாா்வதி, சிவன், விநாயகா், மயில், அகத்தியா், அருணகிரிநாதா் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள் மற்றும் முனிவா் சிற்பங்கள் வழிநெடுகிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் சாலையோரம் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட சிற்பங்களை சேதப்படுத்தியுள்ளனா்.
கோயில் பராமரிப்பு, பாதுகாப்புப் பணிகளில் தொய்வு உள்ளதே இதுபோன்ற குற்றச் செயலுக்கு வழிவகை செய்துள்ளதாக பக்தா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
மேலும், இக்கோயிலுக்கென தனி செயல் அலுவலா் ஒருவரை விரைந்து நியமிப்பதோடு மலைக்கோயிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான பொருள்களின் பாதுகாப்பை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும். கோயில் சிற்பங்களை சேதப்படுத்திய மா்ம நபா்களை கண்டுபிடித்து அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...