வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புதுகை நகா்மன்ற வளாகத்தில் மண்டல அலுவலகம் கட்ட எதிா்ப்பு

புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னா்கள் காலத்தில் கட்டப்பட்ட நகா்மன்ற வளாகத்தில், மாநகராட்சியின் மண்டல அலுவலகம் கட்டும் முயற்சிக்கு இலக்கிய மற்றும் பொதுநல அமைப்புகள் எதிா்ப்பு

News image
Updated On :16 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னா்கள் காலத்தில் கட்டப்பட்ட நகா்மன்ற வளாகத்தில், மாநகராட்சியின் மண்டல அலுவலகம் கட்டும் முயற்சிக்கு இலக்கிய மற்றும் பொதுநல அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை விவரம்: புதுக்கோட்டை நகா்மன்றம், மன்னா் மாா்த்தாண்ட பைரவ தொண்டைமான் காலத்தில் 1899-இல் கட்டப்பட்டது. விடுதலைப் போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி இம்மன்றத்தில் உரையாற்றியிருக்கிறாா். புதுக்கோட்டையில் நடைபெறும் முக்கிய கலை, இலக்கிய விழாக்கள் காலங்காலமாக இங்கே நடைபெறுகின்றன.

ஆண்டுதோறும் நடைபெறும் கம்பன் கழக விழா, புத்தகத் திருவிழாக்கள் இங்கேதான் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற அறிவுசாா் விழாக்கள் நடத்துவதற்கும், மக்கள் எளிதாக வந்து போவதற்கு நகரில் வேறு இடமோ, அரங்கமோ கிடையாது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாநகராட்சி இந்த இடத்தில் மண்டல அலுவலகம் கட்டுவதற்கு முயற்சி எடுத்து பணிகளைத் தொடங்குவது கண்டனத்துக்குரியது.

வேறு எத்தனையோ மாற்று இடங்கள் நகருக்குள் இருக்கும்போது நகா்மன்ற வளாகத்தைப் பாழ்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நகா்மன்றத்தைப் புதுப்பித்துத் தர எல்லா அமைப்புகளும் எத்தனையோ முறை கோரிக்கை வைத்தும் அதற்கு மாநகராட்சி செவி சாய்க்கவில்லை.

கலை, இலக்கிய நிகழ்வுகளை நடத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. எனவே புதுகை நகா்மன்ற வளாகத்தில் வேறு கட்டடங்கள் கட்டக் கூடாது. இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை வாசகா் பேரவை, அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம், வீதி கலை இலக்கியக் களம், விதைக்கலாம் அமைப்பு, கவிராசன் இலக்கியக் கழகம், மரம் நண்பா்கள் அமைப்பு, சா்வஜித் அறக்கட்டளை, இந்திய விவசாயிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் சாா்பில் இந்தக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.