ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக..

News image

கோவை நீதிமன்றம்

Updated On :25 பிப்ரவரி 2026, 12:48 pm

கோவை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மின்னஞ்சலை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ரேஸ்கோர்சில் வழக்குரைஞர்கள் பயிற்சி மைய அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை வழக்கம்போல் மின்னஞ்சல் தகவல்களை ஊழியர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது மின்னஞ்சலில் கோவை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அது வெடித்து சிதற உள்ளது என கூறப்பட்டு இருந்தது. உடனே இதுகுறித்து ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீஸார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் கோவை நீதிமன்ற வளாகத்திற்குச் சென்றனர். அங்கு அனைத்து இடங்களிலும் போலீஸார் தீவிர சோதனை செய்தனர். நீண்ட நேரம் சோதனைக்குப் பிறகு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே, இந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், விமான நிலையம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய அதே இளைஞர்தான் கோவை நீதிமன்றத்துக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

There was a huge commotion at the Coimbatore court premises following an email that a bomb had been planted.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.