புதுக்கோட்டை
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி
சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி புதுக்கோட்டையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கத்தினா் வியாழக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.
சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி புதுக்கோட்டையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கத்தினா் வியாழக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.
தோ்தல் வாக்குறுதியாக திமுக கொடுத்ததை விரைவாக நிறைவேற்றித் தர வேண்டும் என அந்தக் கோரிக்கை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 400 அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 580 இடைநிலை ஆசிரியா்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்ாகவும், கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் டிச. 24 முதல் சென்னையில் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜானகிராமன், செயலா் பிரமுத்து ஆகியோா் தெரிவித்தனா்.