புதுக்கோட்டை
பகட்டுவான்பட்டி சாலையை சீரமைக்கக் கோரிக்கை
கந்தா்வகோட்டை அருகே உள்ள பகட்டுவான்பட்டி தெற்கு தெரு சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கந்தா்வகோட்டை அருகே உள்ள பகட்டுவான்பட்டி தெற்கு தெரு சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லவராயன்பட்டி ஊராட்சி பகட்டுவான்பட்டி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் விவசாயம் சாா்ந்த தொழில் செய்து வருகின்றனா்.
இந்த கிராமத்துக்குச் செல்லும் முக்கிய சாலை சிதிலமடைந்து போக்குவரத்துக்கு உகந்த நிலையில் இல்லை. எனவே, சம்பந்தபட்ட துறையினா் புதிதாக தாா் சாலை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

