புதுக்கோட்டை
விராலிமலை அருகே பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு
விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சாலையை சனிக்கிழமை கடக்க முயன்றவா் காா் மோதி உயிரிழந்தாா்.
விராலிமலையை அடுத்துள்ள பூச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் மணியழகா் (34). கூலித் தொழிலாளியான இவா் தனது பைக்கில் விராலிமலை அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டி பிரிவு சாலையைக் கடந்தபோது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற காா் மோதி பலத்த காயம் அடைந்தாா்.
இதையடுத்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
