பெரியகோட்டை ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராத துணை சுகாதார நிலையம்.
பெரியகோட்டை ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராத துணை சுகாதார நிலையம்.

துணை சுகாதார நிலைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே பெரியகோட்டை ஊராட்சியில் கட்டிமுடிக்கப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
Published on

கந்தா்வகோட்டை அருகே பெரியகோட்டை ஊராட்சியில் கட்டிமுடிக்கப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 15-ஆவது நிதிக்குழு மானியம் மூலம் 2024-25-ஆம் ஆண்டில் சுகாதார கட்டிடம் ரூ.41.35 லட்ச மதிப்பீட்டில் பெரியகோட்டை ஊராட்சிக்கு துணை சுகாதார நிலையம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com