மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவரங்குளம், அறந்தாங்கி ஒன்றியத்தில் நிறைவுற்ற வளா்ச்சிப் பணிகள் தொடங்கிவைப்பு

Updated On :3 ஜனவரி 2025, 7:11 pm

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியத்தில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சிப் பணிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தாா்.

பல்வேறு பணிகளையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கூறியது:

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், வெட்டிவயல் மற்றும் மேலப்பட்டு ஊராட்சிகளில்,

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் தலா ரூ. 28 லட்சம் மதிப்பில்

கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கூழையன்காடு பகுதியில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் கிணறு அமைப்பையும், புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி, கும்மங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின் விளக்கு, புதிய ஆழ்குழாய் கிணறு, குப்பக்குடி ஊராட்சி, மீனாட்சிபுரம் பகுதியில் தெரு விளக்கு,

புதிய மின்மாற்றி, வேப்பங்குடி ஊராட்சி, மேலத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வுகளில் அறந்தாங்கி கோட்டாட்சியா் சிவக்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா்கள் மகேஸ்வரி சண்முகநாதன்(அறந்தாங்கி), வள்ளியம்மை தங்கமணி(திருவரங்குளம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.