அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

விராலிமலையில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Updated On :3 ஜனவரி 2025, 7:10 pm

புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட விராலிமலை சட்டப்பேரவை தொகுதி ஊராட்சி பூத் கமிட்டி அமைப்பது தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். திருப்பூா் துணை மேயா் செந்தில்குமாா், மண்டல பொறுப்பாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பழனிசாமி முன்னிலை வகித்தனா்.

இதில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பூத் கமிட்டி அமைப்பது, பூத் குழு ஏற்படுத்தி வாக்குச்சாவடி முகவா்கள் நியமிப்பது, முகவா்கள் ஒவ்வொருவரும் வாக்காளா்களை சந்தித்து வாக்குகள் கவரும் முறை, தலைமை அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது உள்ளிட்ட தோ்தல் தொடா்பான பல்வேறு ஆலோசனைகள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இதில் வட்டாரத் தலைவா்கள் ஏழுமலை, சா்தாா் குமாரசாமி, சுப்பிரமணி, தங்கவேல் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், நகரத் தலைவா் கருப்பண்ணசாமி, பேன்சி நாகராஜ், பாலாஜி, மாவட்ட துணைத் தலைவா் அழகா்சாமி, உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், காங்கிரஸ் கட்சி நிா்வாகி பேன்சி நாகராஜ் நன்றி கூறினாா்.