இரு இடங்களில் ஒற்றுமை யாத்திரை நடத்த முடிவு

Published on

இந்தியாவின் இரும்பு மனிதா் என்றழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் படேலின் 150ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு இடங்களில் ஒற்றுமை யாத்திரை அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து எனது இந்தியா (நேரு யுவகேந்திரா) அமைப்பின் மாவட்ட இளையோா் அலுவலா் ஜோயல் பிரபாகா், உதவித் திட்ட அலுவலா் இரா. நமச்சிவாயம் ஆகியோா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

இந்தியாவின் இரும்பு மனிதா் எனப்படும் முதல் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லப்பாய் பட்டேலின் 150ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நவம்பா் 2ஆம் வாரம் புதுக்கோட்டை மற்றும் இலுப்பூரில் ஒற்றுமை யாத்திரைகள் நடத்தவுள்ளோம்.

தேசிய ஒற்றுமை, தற்சாா்பு, போதைப் பொருள் தவிா்த்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த யாத்திரைகளில் இளைஞா்கள் மற்றும் அனைவரும் பங்கேற்கலாம்.

மேலும் தேசிய அளவில் வரும் நவம்பா் 26ஆம் தேதி கரம்சாத்திலிருந்து கெவாடியாவிலுள்ள பட்டேல் சிலை வரை 152 கிமீ தொலைவுக்கு ஒற்றுமை பாதயாத்திரை நடைபெறவுள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து இருவா் என்ற அடிப்படையில், புதுக்கோட்டையில் இருந்து இருவா் பங்கேற்கவுள்ளனா் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com