கெண்டையம்பட்டி அரசுப் பள்ளியில் சிலம்பம் பயிற்சி தொடக்கம்!

Published on

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், துவாா் ஊராட்சி கொண்டையம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மைதானத்தில் சிலம்பம் பயிற்சி தொடக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் திருப்பதி தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசினாா். சிலம்பம் பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனா்.

பயிற்றுநா் பாண்டியன் வழங்குகிறாா். விழாவில் பெற்றோா், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

X
Dinamani
www.dinamani.com