புதுக்கோட்டை
பொன்னமராவதி கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு
பொன்னமராவதி வலையபட்டி திருமூா்த்தி விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வலையபட்டி திருமூா்த்தி விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் திருமூா்த்தி விநாயகருக்கு பால், சந்தனம், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். இதேபோல், பொன்னமராவதி கோட்டைப்பிள்ளையாா்கோயில், சேங்கை ஊரணி செல்வவிநாயகா் கோயில், சங்கரன்குண்டு விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சங்கடஹர சதுா்த்தி வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
