617 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
புதுக்கோட்டையில் 617 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
காரைக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 429 பேருக்கும், பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 175 பேருக்கும், 13 மாணவிகளுக்கும் என மொத்தம் 617 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத்அலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா் ஜெ. ஆரோக்கியராஜ், மாவட்ட திமுக செயலா் கேகே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

