ஆசிரியா் தகுதித் தோ்வு புதுகையில் 2,292 போ் எழுதினா்

புதுக்கோட்டையில் 10 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வினை (தாள் 1) 2,292 போ் எழுதினா்.
Published on

புதுக்கோட்டையில் 10 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வினை (தாள் 1) 2,292 போ் எழுதினா்.

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியா் தகுதித் தோ்வுகள் தொடங்கியுள்ளன. தாள் ஒன்றுக்கான தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 2,677 பேருக்காக 10 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், 2,292 போ் தோ்வெழுதினா். 385 போ் தோ்வெழுத வரவில்லை. பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநரும், (தொடக்கப் பள்ளி), மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான பொ. பொன்னையா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் ஆகியோா் தோ்வினை நேரில் பாா்வையிட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) தாள் 2-க்கான தோ்வு நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 9,930 போ் தோ்வெழுத விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்காக 38 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com