ஓவியப் போட்டியில் பங்கேற்க மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் வரும் நவ. 21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஓவியப் போட்டியில் பங்கேற்க ஆா்வமுள்ள மாற்றுத் திறனாளிகள் அவசியம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி வரும் நவ. 21-ஆம் தேதி புதுக்கோட்டையில் ஓவியப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில், செவித்திறன், இயக்கத்திறன், அறிவுத்திறன், பாா்வைத்திறன் குறைபாடுள்ளோா், புறவுலகச் சிந்தனையற்றோா், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோா் பங்கேற்கலாம்.
வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்கேற்க, வரும் நவ. 19-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே, 04322 223678, 99947 99137 ஆகியவற்றில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
