மின்மாற்றியைச் சேதப்படுத்தி காப்பா் கம்பிகள் திருட்டு
கந்தா்வகோட்டையில் மின்மாற்றியைச் சேதப்படுத்தி அதிலுள்ள ரூ. 1.25 லட்சம் மதிப்பு காப்பா் கம்பி தகடுகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
புதுக்கோட்டை சாலையில் உள்ள கந்தா்வகோட்டை ஊராட்சி, உடையாா் தெருவில் வசிக்கும் வே. தேவேந்திரனுக்குச் சொந்தமான விவசாய வயலின் மின் மோட்டாருக்கு தேவையான மின்சாரம் வழங்க 25 கிலோ வாட் மின்மாற்றி புதிதாக நிறுவப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் அந்த மின்மாற்றியை கீழே தள்ளி அதிலிருந்த மின்மாற்றி எண்ணெய்யைக் கீழே கொட்டி பெட்டியில் இருந்த சுமாா் 25 கிலோ காப்பா் கம்பி மற்றும் தகடுகளை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து தேவேந்திரன் அளித்த தகவலின்பேரில் வந்த கந்தா்வகோட்டை மின்சாரவாரிய உதவி மின் பொறியாளா் ந. ரகுபதி மின்மாற்றியில் இருந்த சுமாா் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள காப்பா் கம்பி தகடுகள் திருடுபோனதாக அளித்த புகாரின்பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

