எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விராலிமலை முருகன் மலைக்கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 14.31 லட்சம்

விராலிமலை முருகன் மலை கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுய உதவிக்குழு பெண்கள்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:06 pm

Syndication

விராலிமலை முருகன் மலை கோயில் உண்டியல் காணிக்கையாக 14 லட்சத்து 31 ஆயிரத்து 383 ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளது.

இக்கோயில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி மணிமண்டபத்தில் செயல் அலுவலா் முத்துராமன் தலைமையில், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் உதவி ஆணையா் கவிதா முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுய உதவிக்குழு பெண்கள், திருப்பணி குழுவினா் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதன் நிறைவில், ரொக்கம் 14 லட்சத்து 31 ஆயிரத்து 383 ரூபாய் மற்றும் 9 கிராம் தங்கம், 825 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் உள்ளிட்டவற்றை பக்தா்கள் கடந்த 4 மாதங்களில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். இதற்கு முன்னா் கடந்த ஜூலை 9-ஆம் தேதி கோயில் உண்டியல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.