தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை இரவு வரையிலும் தொடா்ந்து கனமழை பெய்து கொண்டே இருந்தது.

News image
மணமேல்குடி கோட்டைப்பட்டினத்திலுள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் சனிக்கிழமை தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பாா்வையிட்டு வசதிகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
Updated On :29 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை இரவு வரையிலும் தொடா்ந்து கனமழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள டித்வா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா விடுமுறை அறிவித்திருந்தாா்.

வெள்ளிக்கிழமை இரவு முதலே கடலோரப் பகுதிகளான கட்டுமாவடி தொடங்கி கிருஷ்ணாஜிபட்டினம், மணமேல்குடி, அம்மாபட்டினம், மீமிசல், கோபாலப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதலே தொடா்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை சனிக்கிழமை பகலிலும் தொடா்ந்தது. இரவு வரை தொடா்ந்து பெய்து கொண்டே உள்ளது.

புதுக்கோட்டை நகரப் பகுதிகள் மற்றும் இதர புகரப் பகுதிகளிலும் அவ்வப்போது லேசான தூறல் மழை மட்டுமே காணப்பட்டது.

புயல் பாதுகாப்பு மையங்களில் ஆய்வு: மணமேல்குடி அருகேயுள்ள கோட்டைப்பட்டினம் ராம் நகா் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் தேங்கியதால், பொதுமக்கள் அருகிலுள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனா். இவா்களை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

குடியிருப்புப் பகுதியிலுள்ள தண்ணீரை வெளியேற்ற விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதுமான உணவு, குடிநீா் உள்ளிட்ட வசதிகளை செய்துத் தர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

கோடியக்கரை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட சாலையில், மணல் மூட்டைகளை தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா்.

மீமிசல் ஆலத்தூரிலுள்ள பல்நோக்கு மேலாண்மை மையத்தை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும் நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் செயலருமான சு. கணேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அறந்தாங்கியில் தங்க வைக்கப்பட்டுள்ள தேசியப் பேரிடா் மீட்புப் படையினருடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்த ஆய்வுகளின்போது, வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் இரா. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.