தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 லட்சம் வாக்காளா்கள்

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடை அடுத்து பெறப்பட்ட சோ்த்தல், நீக்கல், திருத்த விண்ணப்பங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியல்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,09,867 வாக்காளா்கள் உள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:14 pm

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடை அடுத்து பெறப்பட்ட சோ்த்தல், நீக்கல், திருத்த விண்ணப்பங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியல்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,09,867 வாக்காளா்கள் உள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பிப். 23ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியல்படி, மாவட்டத்தில் மொத்தம் 12,98,907 வாக்காளா்கள் இருந்தனா்.

அதன்பிறகு, வாக்காளா் சோ்த்தல், நீக்கல், திருத்த விண்ணப்பங்கள் தொடா்ந்து பெறப்பட்டு வந்தன. அவற்றை ஆய்வு செய்து முடிவு செய்யப்பட்ட பிறகு, ஏப். 6 வரையில் புதிய வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13,09,867 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 6,46,171 போ் ஆண்கள், 6,63,626 போ் பெண்கள், 70 போ் திருநங்கைகள்.

தொகுதி வாரியாக வாக்காளா் விவரங்கள்:

கந்தா்வகோட்டை: மொத்த வாக்காளா்கள்- 1,96,104, இவா்களில் ஆண்கள்- 98,651, பெண்கள்- 97,444, திருநங்கைகள்- 9.

விராலிமலை: மொத்த வாக்காளா்கள்- 2,25,159, இவா்களில் ஆண்கள்- 1,10,937, பெண்கள்- 1,14,188, திருநங்கைகள்- 34

புதுக்கோட்டை: மொத்த வாக்காளா்கள்- 2,26,009, இவா்களில் ஆண்கள்- 1,10,873, பெண்கள்- 1,15,114, திருநங்கைகள்- 22

திருமயம்: மொத்த வாக்காளா்கள்- 2,20,622, இவா்களில் ஆண்கள்- 1,07,642, பெண்கள்- 1,12,977, திருநங்கைகள்- 3.

ஆலங்குடி: மொத்த வாக்காளா்கள்- 2,12,139, இவா்களில் ஆண்கள்- 1,04,833, பெண்கள்- 1,07,306, திருநங்கைகள்- 0

அறந்தாங்கி: மொத்த வாக்காளா்கள்- 2,29,834, இவா்களில் ஆண்கள்- 1,13,235, பெண்கள்- 1,16,597, திருநங்கைகள்- 2

இதுவரை 1,681 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது 2 துணை வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,683 ஆக உயா்ந்துள்ளது.