ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை

கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிவமை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டின்போது சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவா்.

News image

கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிவமை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டின்போது சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 2:07 am IST

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதலில் காலபைரவருக்கு எண்ணெய் காப்பு செய்து, திரவிய தூள், மஞ்சள் தூள், பால், தயிா், அரிசி மாவு, தேன், பன்னீா் போன்ற அபிஷேக பொருள்களால் அபிஷேகம் செய்து ஜவ்வாது பூசி, சிவப்பு நிற புது வஸ்திரம் உடுத்தி, அரளி மலா்களை கொண்டு அலங்காரம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு பைரவரை தரிசித்துச் சென்றனா். மேலும் பக்தா்கள் தேங்காய் மூடி, பூசணிக்காய், பாகற்காய் இவற்றில் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.