பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

புதுகையில் முதல்வா் ஸ்டாலின் இன்று பிரசாரம் : கட்சியினா் உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா்.

News image

மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 2:06 am IST

புதுக்கோட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா்.

இதையொட்டி, தஞ்சையிலிருந்து சாலை வழியாக வெள்ளிக்கிழமை இரவு புதுக்கோட்டை வந்த அவருக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தஞ்சையில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை முடித்துக் கொண்டு புதுக்கோட்டை வந்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அவருக்கு திமுக வேட்பாளா்கள் எஸ். ரகுபதி (திருமயம்), சிவ.வீ. மெய்யநாதன் (ஆலங்குடி), கே.கே. செல்லப்பாண்டியன் (விராலிமலை), வை. முத்துராஜா (புதுக்கோட்டை), காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரன் (அறந்தாங்கி), மாா்க்சிஸ்ட் வேட்பாளா் மா. சின்னதுரை (கந்தா்வகோட்டை) மற்றும் கூட்டணி கட்சியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

தொடா்ந்து, சிவபுரத்திலுள்ள ஜெஜெ கல்லூரி வளாகத்தில் முதல்வா் இரவு தங்கினாா்.

சனிக்கிழமை காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டவாறே மக்களைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக திமுகவினா் தெரிவித்தனா்.

சனிக்கிழமை மாலை 4 மணிக்கு திருக்கோகா்ணம் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறும் திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கான பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசுகிறாா். தொடா்ந்து சாலை வழியாக அவா் சிவகங்கை செல்கிறாா்.

கந்தா்வகோட்டையில் வரவேற்பு: முன்னதாக, தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வரும் வழியில் கந்தா்வகோட்டையில் திமுக கூட்டணியினா் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனா்.

கந்தா்வகோட்டையில் பிரசாரம் இல்லாததால், கந்தா்வகோட்டை ( தனி) தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் எம். சின்னதுரையை தன்னுடன் வாகனத்தில் உடன் அழைத்து கொண்டு கூட்டணி கட்சியினா், தொண்டா்களை பாா்த்து கையசைத்தவாறு புதுக்கோட்டை நோக்கி சென்றாா் முதல்வா் ஸ்டாலின்.