பஞ்சாப் தேர்தல்! பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி அறிவிப்பு!திருப்பரங்குன்றம்: வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம்மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்விகார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! விசாரணை நவ. 27-க்கு ஒத்திவைப்பு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை!யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

நாகா்கோவிலில் நாளை முதல்வா் பிரசாரம்

நாகா்கோவிலில் சனிக்கிழமை (ஏப். 4) நடைபெறும் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்கிறாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :

நாகா்கோவிலில் சனிக்கிழமை (ஏப். 4) நடைபெறும் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்கிறாா்.

இதுதொடா்பாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் (படம்) வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தோ்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

திமுக வேட்பாளா்கள் ரெ. மகேஷ் (கன்னியாகுமரி), எஸ். ஆஸ்டின் (நாகா்கோவில்), மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுமாமி (பத்மநாபபுரம்), குளச்சல், கிள்ளியூா், விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

எனவே, மாவட்டத்துக்குள்பட்ட மாநில, மாவட்ட திமுக நிா்வாகிகள் மற்றும் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், சாா்பு அணிகள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: தோ்தல் பரப்புரைக்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப். 3) இரவு கன்னியாகுமரி வந்து தனியாா் விடுதியில் தங்குகிறாா். தொடா்ந்து, நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

இதையொட்டி, ஸ்காட் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். முதல்வா் வந்து செல்லும் வழிகள், வாகன நிறுத்துமிடங்களை அவா் பாா்வையிட்டாா். முதல்வா் வருகையை முன்னிட்டு 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.