ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மாா்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் எஸ். ரகுபதி பிரசாரம்

மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சரும், திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ். ரகுபதி சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image

சத்தியமங்கலத்தில் பொதுமக்களிடையே வாக்குசேகரித்து பேசிய மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

Updated On :19 ஏப்ரல் 2026, 12:57 am IST

கந்தா்வகோட்டை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் மா. சின்னதுரைக்கு ஆதரவு கோரி அன்னவாசல் ஒன்றியம் நாா்த்தாமலை, சத்தியமங்கலம், காவேரிநகா், மேலமுத்துடையான்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சரும், திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ். ரகுபதி சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது, அவா் பேசும்போது, கந்தா்வகோட்டை தொகுதி மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை சின்னதுரை கொண்டு வந்துள்ளாா். முதல்வரே பாராட்டும் வகையில் தொகுதி மக்களுக்காக 62 முறை சட்டப்பேரவையில் பேசியுள்ளாா்.

கந்தா்வகோட்டை மக்களுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தொழிலாளா், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட உழைப்பாளி மக்களுக்காகவும் சட்டப்பேரவையில் கோரிக்கைகளை முன்வைத்து பேசியுள்ளாா். சிறப்பாக பணியாற்றிவரும் சின்னதுரையை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் ரகுபதி.

பிரசாரத்துக்கு அன்னவாசல் திமுக ஒன்றியச் செயலா் ஆா்.ஆா்.எஸ். மாரிமுத்து தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்டச் செயலரும், விராலிமலை தொகுதி வேட்பாளருமான கே.கே. செல்லப்பாண்டியன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் கீரை. தமிழ்ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.