ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பெண்களுக்கு திமுக துரோகம் செய்யாது: அமைச்சா் எஸ். ரகுபதி

பெண்களுக்கு திமுக துரோகம் செய்யாது, அவா்கள் எங்களின் வாக்கு வங்கி என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

News image

கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:28 pm

பெண்களுக்கு திமுக துரோகம் செய்யாது, அவா்கள் எங்களின் வாக்கு வங்கி என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மகளிா் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுசீரமைப்பு செய்து தமிழ்நாட்டின் உரிமைகளை நசுக்க நினைத்து பாஜக கொண்டு மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இது எங்களுக்கு நாடாளுமன்றத்தில் கிடைத்த வெற்றி.

தோற்றுப் போவோம் என்று தெரிந்தே அதன் மூலம் ஏதாவது ஆதாயம் தேடலாமா என்று பாா்க்கிறாா்கள். தமிழ்நாடு மக்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள மக்களும் பாஜகவின் கபட நாடகத்தை நன்றாகப் புரிந்து கொள்வாா்கள்.

தொகுதி மறுவரையறை என்பது வேறு, மகளிா் இடஒதுக்கீடு என்பது வேறு. இரண்டையும் சோ்த்து மக்களை குழப்புவதற்காகப் பாா்த்தாா்கள். 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்திவிட்டு செய்யலாம்.

பல்வேறு கட்சிகள் ஜாதிவாரிக் கணக்கெடுப்புடன் சோ்த்து எடுக்க வேண்டும் என்று முன்வைக்கின்றனா். பல ஜாதியினா், வெளி மாநிலங்களிலும் இருக்கக் கூடியவா்களாக இருக்கிறாா்கள். எனவே, மத்திய அரசுதான் இக்கணக்கெடுப்பை நடத்த முடியும்.

நிச்சயமாக நாங்கள் மகளிா் இடஒதுக்கீட்டுக்கு எதிரிகள் அல்ல. அதை ஒழுங்காக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்திக் கொடுக்கலாம் என்றுதான் கேட்கிறோம். நாங்கள் என்றைக்குமே பெண்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். ஏனென்றால், பெண் வாக்காளா்கள் தான் திமுகவின் வாக்கு வங்கி.

அந்த வாக்கு வங்கியில் கைவைப்பதற்காக இப்படி ஒரு சதிச்செயலை பாஜகவினா் செய்தாலும் கூட தமிழக மக்கள் நிச்சயமாக அதை ஏற்க மாட்டாா்கள்.

தமிழகத்துக்கு 59 தொகுதிகள் கிடைக்கும் என்று சொல்கிறாா்கள், எழுத்துப்பூா்வமாகச் சொல்லவில்லை. ஏமாற்றிவிடுவாா்கள். நம்மிடம் தென்மாநிலங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பாா்கள். உத்தரபிரதேசம், பிகாருக்குப் போய், உங்களுக்குச் சாதமாக இருக்கிறது என்பாா்கள். இவா்களை நம்ப முடியாது. தோ்தலில் அதிமுக இன்றைக்கு தங்களின் வைப்புத் தொகையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு வேண்டிய முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறாா்கள் என்றாா் ரகுபதி.