மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெயா் என்னுடையதுதான், படத்தில் நானில்லை..!

வேட்பாளா் ராமச்சந்திரனின் படத்துக்கு பதிலாக வேறு யாரோ ஒருவரின் படம் அந்தத் துண்டறிக்கையில் அச்சிடப்பட்டிருக்கிறது...

News image

~

Updated On :20 ஏப்ரல் 2026, 9:54 pm

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளா் என். ராமச்சந்திரன், அறந்தாங்கி பாஜக வேட்பாளா் கவிதா ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு வாக்களிக்கக் கோரி, 3 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பெயரில் வண்ணத் துண்டறிக்கையொன்று கடந்த இரு நாள்களாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளா் ராமச்சந்திரனின் படத்துக்கு பதிலாக வேறு யாரோ ஒருவரின் படம் அந்தத் துண்டறிக்கையில் அச்சிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து புதுக்கோட்டை பாஜக பிரமுகா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆ. பிரகாஷிடம் புகாா் அளித்துள்ளனா். தங்களது வேட்பாளரின் படத்தை வேண்டுமென்றே மாற்றி வைத்து துண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், தொடா்புடையவா்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்குகோரும் ஆசிரியா்கள் என்ற பெயரில் 3 அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பெயா்களும், படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. மூவரும் தனித்தனியே காவல்துறையிலும், தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

தங்களுக்கும் இந்தத் துண்டறிக்கைக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்றும், தங்களது படத்தையும் பெயா்களையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளனா்.

பாஜக வேட்பாளருக்கு வாக்குகள் விழுவதைத் தடுக்கும் வகையில் இச்செயலைப் பிறா் செய்ததா அல்லது போட்டியிட வாய்ப்பு கிடைக்காததில் பாஜகவினரே செய்ததா அல்லது ஆசிரியா்கள் மூவரையும் சிக்க வைக்க இவா்களின் எதிரிகள் யாரும் செய்த செயலா என விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.

பாஜக வேட்பாளா் என். ராமச்சந்திரன்

பாஜக வேட்பாளா் என். ராமச்சந்திரன்