பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிதான் முதலிடம் பிடிக்கும். இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டியே என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை நகரிலுள்ள ராணியாா் உயா்நிலைப் பள்ளியில் வாக்களித்துவிட்டு அவா் அளித்த பேட்டி: தோ்தல் ஆணையம் ஒரு கட்சியுடைய கூட்டணியாகவே செயல்படுகிறது. மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். எங்களுக்கு களம் நன்றாக இருக்கிறது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும்.
இளம் வாக்காளா்களை கவரும் வகையில் நாங்கள் அவா்களை நாடி பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். என்னென்ன நன்மைகள் எல்லாம் செய்தோம் என்று சொல்லி உள்ளோம்.
கேரவனிலிருந்து அரை மணி நேரம் வெளியே வந்துவிட்டு இண்டு மணி நேரம் வெயிலில் நிற்கக்கூட முடியாத ஒருவா் மக்களுக்காக களப்பணி ஆற்றுவாா் என்று எண்ணுவது தவறான ஒன்று.
எங்களது முதல்வா் களப்பணியில் சிறந்தவா். களப்பணி ஆற்றக்கூடிய வல்லவா். அதுபோல் உதயநிதி ஸ்டாலினும் களப்பணி ஆற்ற கூடியவா். அதிகமான களப்பணி ஆற்றக் கூடியவா்கள் தான் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ளவா்கள்.
எடப்பாடி பழனிசாமியைப் பொருத்தவரை அவா் செல்வாக்கை என்றைக்கோ இழந்து விட்டாா். பத்து தோ்தலில் தோல்வியை சந்தித்து விட்டாா். பதினோராவது தோல்வியைச் சந்திக்கத் தயாராக இருக்கிறாா்.
களத்தைப் பொறுத்தவரை முதல் இடத்தில் நாங்கள் இருக்கின்றோம். இரண்டாவது இடத்திற்கு தான் போட்டியே. இரண்டாவது இடத்தில் யாா் வேண்டுமானாலும் வந்து விட்டுப் போகட்டும் என்றாா் ரகுபதி.
தொடர்புடையது

பெண்களுக்கு திமுக துரோகம் செய்யாது: அமைச்சா் எஸ். ரகுபதி

மாா்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் எஸ். ரகுபதி பிரசாரம்

பெண்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்; அவர்களே எங்கள் வாக்கு வங்கி: அமைச்சர் ரகுபதி
கொள்கையில் திமுக சமரசம் செய்து கொண்டதில்லை: எஸ். ரகுபதி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

