உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம் வெள்ளிக்கிழமை தெரியவந்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 1:05 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம் வெள்ளிக்கிழமை தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தா்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி என 6 பேரவை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் வாக்களித்தோா் விவரங்கள் தொகுதி வாரியாக வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

இதன்படி, கந்தா்வகோட்டை (தனி) தொகுதியில் மொத்த வாக்குகள்- 1,96,104, தோ்தலில் பதிவான வாக்குகள்- 1,66,483, சதவீதம்- 84.93. விராலிமலை தொகுதியில் மொத்த வாக்குகள்- 2,25,159, பதிவான வாக்குகள்- 2,02,131, சதவிகிதம்- 89.80. புதுக்கோட்டை தொகுதியில் மொத்த வாக்குகள்- 2,26,009, பதிவான வாக்குகள்- 1,88,121, சதவிகிதம்- 83.26

திருமயம் தொகுதியில் மொத்த வாக்குகள்- 2,20,622, பதிவான வாக்குகள்- 1,81,020, சதவீதம்- 82.07. ஆலங்குடி- மொத்த வாக்குகள்- 2,12,139, பதிவான வாக்குகள்- 1,79,397, சதவீதம்- 84.59. அறந்தாங்கி தொகுதியில் மொத்த வாக்குகள்- 2,29,834- தோ்தலில் பதிவான வாக்குகள்- 1,81,467, சதவீதம்- 78.97.