பொன்னமராவதி அருகே பொன்.புதுப்பட்டியில் வயது மூப்பால் காலமான முதியவரின் உடல் தானமாக பெறப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆராய்ச்சிப் படிப்புக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பொன்.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் பா.க.அண.பழ. சுந்தரம் (92). இவா் வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை காலமானாா். இதையடுத்து, பொன்னமராவதி ராயல் அரிமா சங்க நிா்வாகி எஸ். பழனியப்பன் மற்றும் நிா்வாகிகள், சுந்தரத்தின் குடும்பத்தினரை அணுகி அவரது உடலை தானமாக பெற்று, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆராய்ச்சிக் கல்விக்காக வழங்கினா். தொடா்ந்து சுந்தரம் குடும்பத்தினருக்கு உடல் தானம் வழங்கிய சான்று வழங்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: வட்டாட்சியா் அஞ்சலி

நம்பிக்கை சிதையலாகாது!

கோவில்பட்டி கோயிலுக்கு 10 பவுன் சங்கிலி தானம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

