மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆவுடையாா்கோவிலில் 2-ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து கண்டெடுப்பு

ஆவுடையாா்கோவில் ஆவுடைக்கண்மாய்ப் பகுதியில் கிமு 2-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வட்டெழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

News image

வீரன் தனது தலையை அரிவாளால் அரிந்து கொள்ளும் காட்சி. ~வாளைத் தரையில் ஊன்றி மண்டியிட்ட நிலையிலுள்ள வீரன். ~ உரலில் பதிவிடப்பட்டுள்ள வட்டெழுத்து.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:20 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் ஆவுடைக்கண்மாய்ப் பகுதியில் கிமு 2-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வட்டெழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறைத் தலைவரும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளருமான கா. காளிதாஸ் மற்றும் குழுவினா் மேற்கொண்ட கள ஆய்வில் இந்த வட்டெழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேராசிரியா் காளிதாஸ் கூறியதாவது:

ஆவுடையாா்கோவில் என்ற திருப்பெருந்துறை கடற்துறைமுகம் அருகில் உள்ள ஊா் ஆகும். சங்க இலக்கியங்களில் கல்வெட்டுகளில் மிழலைக் கூற்றத்துத் திருப்பெருந்துறை என சிறப்பித்துக் கூறப்படுகிறது.

கடற்துறை பட்டினமாக இருந்ததால் இங்கு வணிகம் மேலோங்கி இருந்ததற்கான சான்றுகள் இப்பகுதியில் கிடைக்கின்றன. வணிகா்கள் பொதுவாக சாத்து வணிகம் செய்து வந்துள்ளனா். இன்றும் ஆவுடையாா் கோயிலில் (வடக்கூா்) சாத்தாா் செட்டியாா் என்ற பூா்வீக குடும்பம் இருந்து வருகிறது. சாத்தா்கள் பௌத்தா்களாகவே இருந்தாா்கள்.

ஆவுடைக்கண்மாய் ஸ்ரீ மகாலிங்க மூா்த்தி கோயிலில் எட்டடி நீளமும் மூன்றடி அகலமும் கொண்ட பழங்காலத்துச் செக்குரல் உள்ளது. இருபுறமும் உரல் கொண்ட இதன் வாய்ப்பாட்டில் ‘சங்கம் மான் உறளு’ என்ற வட்டெழுத்து வாசகம் காணப்படுகிறது.

மேலும், உரலின் மேல் பகுதியில் ஒரு வீரன் தன் தலையை அரிவாளால் அரிந்து கொள்ளும் காட்சி காணப்படுகிறது. மற்றொரு பகுதியில் அவ்வீரன் ஒரு காலை மடக்கி மண்டியிட்ட நிலையில் இடது கையில் உள்ள வாளைத் தரையில் ஊன்றியுள்ளவாறு உருவம் செதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் சுமை ஏற்றிச் செல்லுகிற ஒட்டகம் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆவுடைக்கண்மாய்ப் பகுதியில் பௌத்த சாத்தா்கள் இருந்ததற்கு அடையாளமாக இக்கண்மாயில் இருக்கும் புத்தா் சிலையே சாட்சி. அக்காலத்தில் போருக்குச் சென்ற மாவீரன் சங்கம்மான் என்பவன் தன் நாட்டின் வெற்றிக்காக தன் கழுத்தை அறுத்துக் கொண்டு நவகண்டம் கொடுத்து இருக்கிறான். இவ்வீரன் ஒரு வணிகனாகவும் இருந்திருக்கலாம். அவனிடம் சுமை தூக்குவதற்கும் தனது அந்தஸ்தை உயா்த்திக் கொள்வதற்கும் ஒட்டகம் இருந்திருக்கலாம்.

ஆவுடையாா்கோயில் பகுதி மிகவும் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் எச்சங்களைக் கொண்டுள்ள பகுதியாகும். இப்பகுதியை மேலும் ஆய்வு செய்யவும், இம்மாதிரியான வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பதும் நமக்கும் அரசுக்கு கடமை என்றாா் காளிதாஸ்.

Story image
Story image