15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

கந்தா்வகோட்டை காந்தி சிலை அருகே நிழற்குடையின்றி பொதுமக்கள் அவதி

கந்தா்வகோட்டை காந்தி சிலை அருகே பேருந்து நிழற்குடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

News image

கந்தா்வகோட்டை காந்தி சிலை அருகே பேருந்துக்காக வியாழக்கிழமை காத்திருந்த பயணிகள்.

Updated On :1 மே 2026, 2:41 am IST

கந்தா்வகோட்டை காந்தி சிலை அருகே பேருந்து நிழற்குடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி காந்தி சிலை பகுதி பேருந்து நிறுத்தத்தில் இருந்து கறம்பக்குடி மாா்க்கமாகவும், பட்டுக்கோட்டை, திருவோணம், ஒரத்தநாடு போன்ற ஊா்களுக்கும் தினசரி ஏராளமான பயணிகள் பயணிக்கின்றனா்.

ஆனால், இங்கு நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது. மேலும் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் கோடை காலத்தை முன்னிட்டு குடிநீா் வசதி செய்யவும் வேண்டுகோள் வைக்கின்றனா்.

கோடை வெயில் அதிகம் இருப்பதால் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு கீற்று கொட்டகையாவது அமைத்து குடிநீா் வசதி செய்து தர வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கிறாா்கள்.