காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

விராலிமலையில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி பேருந்து இறங்கியதில் 6 போ் காயம்

விராலிமலையில் சாலையோர பள்ளத்தில் சனிக்கிழமை ஆம்னி பேருந்து இறங்கிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா்.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையோர பள்ளத்தில் சனிக்கிழமை இறங்கி மரத்தில் மோதி நின்ற ஆம்னி பேருந்து.

Published On :23 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

விராலிமலையில் சாலையோர பள்ளத்தில் சனிக்கிழமை ஆம்னி பேருந்து இறங்கிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா்.

சென்னையில் இருந்து சிவகாசிக்கு 41 பயணிகளை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சிவகாசி பழைய விருதுநகா் ரோடு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் அஜய்ராஜ்(37) என்பவா் ஓட்டிவந்தாா்.

விராலிமலையில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேதாஜி நகா் பகுதி அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையின் மறுபுறம் உள்ள சாலையை தாண்டி பள்ளத்தில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் இறங்கி, அங்கிருந்த வேப்ப மரத்தில் மோதி நின்றது.

இதில், பேருந்தில் இருந்த 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்ற பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த விராலிமலை போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.