
தேசிய தாய்பாக்சிங்: புதுகை மாணவா்கள் 12 போ் வெற்றி
மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான தாய்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் 12 போ் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற தேசிய தாய்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களைக் குவித்த புதுக்கோட்டை வீரா் மற்றும் வீராங்கனைகள்.
மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான தாய்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் 12 போ் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளனா்.
மகாராஷ்டிர மாநிலம் நான்தேட் நகரில் 17ஆவது தேசிய அளவிலான தாய்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த ஆக. 21, 22, 23 தேதிகளில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டின் சாா்பில் பங்கேற்ற 85 பேரில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 14 போ் இடம்பெற்றனா்.
புதுக்கோட்டை மாவட்ட தாய்பாக்சிங் சங்கத்தின் செயலா் எஸ். தினேஷ்குமாா் மற்றும் பயிற்சியாளா்கள் இருதயராஜ், வேந்தன் திருமாறன், வெண்ணிலா ஆகியோா் தலைமையில் இந்தக் குழுவினா் பங்கேற்றனா்.
இப் போட்டிகளில் வெவ்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றவா்கள்- எம்.கே. யாழினி, எஸ். ப்ரித்தியங்கரா, எஸ். சுவஸ்திகேஷ்வா், எம். கஜினிதா. வெள்ளி வென்றவா்கள்- எம். கனிஷியா, எஸ். லக்ஷ்மி பிரியா, ஏ. சந்தோஷ், ஆா். வேந்தன் திருமாறன். வெண்கலம் வென்றவா்கள்- எஸ். தினேஷ்குமாா், எஸ். கோகுல், ஆா். சபரிகணேஷ், பி. தா்ஷன், நித்திலன், மஹாலட்சுமி.
இவா்கள் அனைவரும் வரும் நவம்பரில் கோவாவில் நடைபெறவுள்ள உலக தாய்பாக்சிங் சாம்பியன்ஷிப்- 2026 போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






