புதுக்கோட்டை மாவட்டம் ,ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள தவளப்பள்ளம் கிராமத்தை சோ்ந்த எம். மைக்கேல் (60) கோட்டைக்காடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டைக் காண தனது மனைவி ஆரோக்கியமேரியுடன் மொபெட்டில் சென்றாா்.
சாளுவன்விடுதி பிரிவு சாலைப் பகுதியில் அவா்கள் சென்றபோது எதிரே வந்த பைக் திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த மைக்கேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த ஆரோக்கியமேரி ஆலங்குடி அரசு மருத்துவமனையிலும், விபத்தை ஏற்படுத்திய மற்றொரு பைக்கில் வந்த முக்கானிப்பட்டி ஆ. டென்னீஸ் திருச்சி தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து வடகாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


