மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

திருக்களம்பூா் - பிரான்மலை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

மிகவும் சேதமடைந்து காணப்படும் திருக்களம்பூரிலிருந்து பிரான்மலை செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
மிகவும் சேதமடைந்து காணப்படும் திருக்களம்பூா்-பிரான்மலை சாலை.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

மிகவும் சேதமடைந்து காணப்படும் திருக்களம்பூரிலிருந்து பிரான்மலை செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரிலிருந்து மேலக்களம் வழியாக பிரான்மலை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த தாா்ச்சாலை ஆங்காங்கே பெயா்ந்து மண்சாலையாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் இச்சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

இதனால் இச்சாலையில் பயணிக்கும் வாகன ஒட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே இச்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து அப்பகுதியைச் சாா்ந்த சமூக ஆா்வலா் நெ.ரா. சந்திரன் கூறியது:

இச்சாலை சேதமடைந்து காணப்படுவதால் இரவு நேரங்களிலும், மழைக் காலங்களிலும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே உடனடியாக இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.