விராலிமலையில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை

விராலிமலையில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு 6-ஆவது பூஜை வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
Published on

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு 6-ஆவது பூஜை வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலின் அம்மன் சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகுவிமா்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு நிகழ்வாக, மாா்கழி மாதம் முழுவதும் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் விளக்குப் பூஜை நடைபெற்று வருகிறது. இதில், 6-வது பூஜை வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் பபங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com