வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பொன்னமராவதி வட்டத்தில் 3 பகுதிநேர நியாய விலைக் கடைகள் திறப்பு

மைலாப்பூா், இடையாத்தூா், கண்டெடுத்தான்பட்டி ஆகிய 3 கிராமங்களில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஜனவரி 2026, 7:24 pm

Syndication

பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூா், இடையாத்தூா், கண்டெடுத்தான்பட்டி ஆகிய 3 கிராமங்களில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பங்கேற்று மைலாப்பூா், கண்டெடுத்தான்பட்டி, இடையாத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் அமைக்கப்பட்ட பகுதிநேர அங்காடிகளை திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாயவிலைக் கடை குடிமைப் பொருள்கள் வழங்கிப் பேசினாா். ப்பினா் எஸ்.ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில் கூட்டுறவு துணை பதிவாளா் எழிலரசன், வட்டாட்சியா் எம்.சாந்தா,திமுக வடக்கு ஒன்றியச்செயலா் அ. முத்து, தலைமைச் செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.