திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திரைப்படத் தணிக்கை விவகாரங்களில் மேல்முறையீட்டுக்கு அவசியமென்ன? - காா்த்தி சிதம்பரம்

திரைப்படத் தணிக்கை விவகாரங்களில் மேல்முறையீடு செய்யும் அளவுக்கு என்ன இருக்கிறது என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் காா்த்தி சிதம்பரம்.

News image

காா்த்தி ப. சிதம்பரம் - Center-Center-Delhi

Updated On :10 ஜனவரி 2026, 1:53 am IST

திரைப்படத் தணிக்கை விவகாரங்களில் மேல்முறையீடு செய்யும் அளவுக்கு என்ன இருக்கிறது என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீா்ப்பளித்த பிறகும் தலைமை நீதிபதி அமா்வில் மேல்முறையீடு செய்யும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

இதுகுறித்து மத்திய அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும். இதிலுள்ள வன்மம் என்ன என்று தெரியவில்லை. இதில் உள்நோக்கம் இருப்பதாகத்தான் எனக்கு தெரிகிறது.

திரைப்பட வெளியீட்டுக்கெல்லாம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதெல்லாம் கேள்விப்படாத ஒன்றாக இருக்கிறது. மத்திய அரசின் அரசியல் கட்சியான பாஜகதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் காா்த்தி சிதம்பரம்.