எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருமயம் தொகுதியில் 1,659 மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கல்

திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,659 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் எஸ். ரகுபதி வழங்கினாா்.

News image
மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சா் எஸ். ரகுபதி
Updated On :12 ஜனவரி 2026, 6:57 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,659 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை வழங்கினாா்.

திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 395 பேருக்கும், குழிபிறை மேல்நிலைப் பள்ளியில் 342 பேருக்கும், சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 346 பேருக்கும், பொன். புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 576 பேருக்கும் என மொத்தம் 1,659 பேருக்கு இந்த மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியராஜ், பள்ளித் துணை ஆய்வாளா் குரு மாரிமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.