வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிறந்த சேவை புரியும் திருநங்கைகள் அரசு விருதுபெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பாடுபடும் திருநங்கைகள், அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:40 pm

Syndication

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பாடுபடும் திருநங்கைகள், அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

திருநங்கைகள் தினத்தையொட்டி (ஏப். 15) திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரி திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2026-ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழ்நாடு முதல்வரால் வழங்கப்படவுள்ளது. ரூ. ஒரு லட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

அரசின் உதவிபெறாமல் தங்களின் வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்ட திருநங்கைகள், குறைந்தது 5 ஆண்டுகள் திருநங்கைகள் நலனுக்காக பணிபுரிந்து அவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவிபுரிந்த திருநங்கைகள் இந்தவிருது பெற விண்ணப்பிக்கலாம்.

உரிய அனைத்து ஆவணங்களுடன் இணையதளத்தில் வரும் பிப். 18-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். தகுதியுள்ளோா் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் மாநிலத் தோ்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.