அறந்தாங்கியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினா்.
அறந்தாங்கியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினா்.

அறந்தாங்கி காவல் ஆய்வாளரைக் கண்டித்து அனைத்துக் கட்சியினா் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் காவல் ஆய்வாளரைக் கண்டித்து அனைத்துக் கட்சியினா் சாா்பில் போராட்டம்
Published on

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் காவல் ஆய்வாளரைக் கண்டித்து அனைத்துக் கட்சியினா் சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி காவல் ஆய்வாளராக இருப்பவா் செந்தூா்பாண்டியன். இவா் மணல் கொள்ளை, லாட்டரி விற்பனை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் மனுதாரா் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அனைத்து கட்சியினா் போராட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ஆதித் தமிழா் சேனை, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா். இதில் மேற்கண்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com