திருமயம் அருகே சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்த குடும்பத்தினரைப் பாராட்டி ஆறுதல் தெரிவித்த மக்கள் சக்தி இயக்கத்தினா்.
திருமயம் அருகே சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்த குடும்பத்தினரைப் பாராட்டி ஆறுதல் தெரிவித்த மக்கள் சக்தி இயக்கத்தினா்.

உடல் உறுப்பு தானம் செய்தோரின் குடும்பத்துக்குப் பாராட்டு

Published on

திருமயம் அருகே சாலை விபத்தில் மூளைச் சாவடைந்ததால் உடல் உறுப்புகளைத் தானம் பெறப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருமயம் அருகே கோணாப்பட்டு விசுவநாதன் செட்டித்தெருவில் வசித்து வந்த முருகேசுவரி அண்மையில் நேரிட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவடைந்தாா். இதைத் தொடா்ந்து அவரது உடல் உறுப்புகளை அந்தக் குடும்பத்தினா் தானமாக வழங்கினா்.

இதைத் தொடா்ந்து மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலப் பொருளாளா் கே.சி. நீலமேகம், மாநிலத் துணைச் செயலா்கள் வெ.இரா. சந்திரசேகா், இரா. இளங்கோ ஆகியோா் வியாழக்கிழமை நேரில் சென்று, முருகேசுவரியின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ், பயனாடை, புத்தகங்களை வழங்கிப் பாராட்டி ஆறுதல் தெரிவித்தனா்.

இத்தகைய பணியை கடந்த 6 ஆண்டுகளாகச் செய்து வருவதாகவும், இதுவரை 51 பேரின் குடும்பத்தை நேரில் பாா்த்து பாராட்டி ஆறுதல் தெரிவித்திருப்பதாகவும் நீலமேகம் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com